SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்

1/22/2019 1:12:55 AM

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 22: திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.    திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஒரு வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு பாடல் பெற்ற முக்கிய கோயில்களும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் உள்ளது. இப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் கீழ் 103 கிராமங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரின் சுற்றுவட்டார பகுதியிலிருந்து படிக்கவும், வேலை மற்றும் சொந்த வேலைக்காகவும் இந்த ஊரை கடந்து செல்லும் அளவுக்கு மைய பகுதியாக உள்ளது. இந்த ஊரின் வழியாக எஸ்ஹெச் 69, மாநில சாலை செல்கிறது. இதனால் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. பல்வேறு நிறைகளை கொண்ட திருவெண்ணெய்நல்லூர் ஆன்மிகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டான ஊராக இருந்து வருகிறது. இந்த ஊரின் பெயருக்கு கரும்புள்ளி வைத்தது போல் ஊரின் மையத்தில் இரண்டு அரசின் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான கடைகளால் அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் திருவெண்ணெய்நல்லூர் பல முறை கலவரங்களில் சிக்கி சின்னா, பின்னமாகி விடுகிறது. இரண்டு மதுபான கடைகளும் மாநில சாலையின் 50 மீட்டர் தொலைவுக்குள் அமைக்கப்பட்டுள்ளதஉயர் நீதிமன்றம் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு சாலை ஓரங்களிலும், மக்கள் கூடும் இடங்கள், ஆன்மிக மையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள  மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட நிலையில் திருவெண்ணெய்நல்லூரின் மைய பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையை வைத்துள்ளது. மது கடைக்கு வரும் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு சாலையின் நடுவே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது, ஆபாச வார்த்தைகளால் பேசுவது, வாகன ஓட்டிகளை வழிமறித்து வாக்குவாதம் செய்வது, சாலையில் நடந்து செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்வது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது மேலும் அங்குள்ள குடியிருப்புகளின் முன்பாகவும், அருகிலும் கூட்டமாக அமர்ந்து குடிப்பது அதை தட்டிக் கேட்டால் வீட்டின் உரிமையாளரை ஆபாசமாக திட்டி தாக்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியினர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை கடையை அகற்ற கோரி மனு கொடுத்தனர். ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதி பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினம், தினம் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்ட சமூக ஆர்வலர்களான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன், வழக்கறிஞர் சோலையப்பன் ஆகியோர் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோருக்கு போர்க்கால அடிப்படையில் கடைவீதியில் உள்ள 2 மதுக்கடைகளையும் அகற்ற கோரி புகார் மனு அனுப்பியுள்ளனர். புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலைமறியல் போராட்டமும், உயர் நீதிமன்றத்தில் வழக்கும்  தொடர உள்ளதாக அதில் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்