SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவர் நலவாரிய அட்டை உடனே வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

12/18/2018 12:32:16 AM

நாகை,டிச.18: மீனவர் நலவாரிய அட்டை உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.தமிழ்நாடு ஏஐடியூசி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் சின்னத்தம்பி நாகை கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், மீனவர் நல வாரிய அட்டை பெற வேண்டி கடந்த 26.12.2017ம் ஆண்டு மீனவத் தொழிலாளரிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட 50 படிவங்களை முன்னாள் மீனவளத்துறை இணை இயக்குனரிடம் வழங்கினோம். இது வரை நல வாரிய அட்டை வாங்க வில்லை. இது சம்பந்தமாக நாகை கலெக்டரிடம் 2.7.2018 அன்றும், தமிழக முதல்வருக்கு கடந்த 8.6.2018 அன்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மனு கொடுத்தவரில் ஒருவர் இறந்துவிட்டடார் அவருக்கு எந்த ஒரு நிவாரணம் வாரியம் மூலம் பெற முடியவில்லை. மேலும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவையும் பெற முடியவில்லை. உடன் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீனவளத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்