SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்

12/18/2018 12:32:08 AM

சீர்காழி,டிச.18: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் புதிய சாலை அமைத்து பாலம் கட்டும் பணி துவங்கியது.சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பின்பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை கடந்து சென்று வந்தனர். தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்பக்கம் வசிப்பவர்களுக்கு பாதை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என எம்எல்ஏ பாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து கழுமலையாற்றின் கரைபகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அக்றறி புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், கழுமலையாற்றின் வடிகால் வாய்க்காலில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலம் மற்றும் புதிய சாலை அமைக்கும் பணி விரைவில் முடிந்தால் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். விரைவாக பாலம் கட்டும் பணியை முடித்து சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதியில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்