SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயல் நிவாரண தொகையை பொதுமக்களின் வங்கி கணக்கில் விரைந்து செலுத்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் மனு

12/18/2018 12:31:36 AM

காரைக்கால்,டிச.18: காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, புதுச்சேரி அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணம், பொதுமக்கள் வங்கி கணக்கில் இதுவரை வரவு வைக்கவில்லை. எனவே அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.டிசம்பர் மாதத்திற்கான 2ம் கட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், இதுவரை வந்துள்ள புதுவைக்குரல் இணையதள புகார்கள் மீது அரசுத்துறைகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேசவன் அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் நேரடி புகார்களை கேட்டறிந்தார். அப்போது பேசிய பொதுமக்கள் பலர், அரசின் எல்ஜிஆர் பட்டா கடந்த பல மாதங்களாக வழங்காமல் உள்ளது. ஒரே வீட்டில் பலர் வசிப்பதால், பலவித இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, எல்ஜிஆர் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, புதுச்சேரி அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணம், பொதுமக்கள் வங்கி கணக்கில் இதுவரை வரவாகவில்லை. எனவே அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தூர், பண்டாரவடை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் சரியில்லை அவற்றை சீரமைத்து தரவேண்டும். கோட்டுச்சேரி திருவேட்டக்குடி, நெடுங்காடு கிராமங்களில் பாசனத்திற்கு காவிரி நீர் துளிக்கூட வராமல் உள்ளது. காவிரி நீர் விரைந்து கிடைக்க வழிவகை செய்யவேண்டும். என புகார் அளித்தனர். மேலும், அதிகமான பேர், கஜா புயலுக்கு பிறகு அதிகமான இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. அவற்றை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, அரசுத்துறை அதிகாரிகளிடையே கலெக்டர் கேசவன் பேசும்போது, இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 35 புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுத்துறையினர் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த துறையினருக்கு புதுவைக்குரல் இணையதளம் மூலமாக வரும் புகார்கள் மீதும் உறுதியான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். கூட்டத்தில், சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்