SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் அருகே மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கத்திக்குத்து

12/18/2018 12:31:20 AM

வேதாரண்யம், டிச. 18: வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (38). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரை அதே ஊரை சேர்ந்த கருணாநிதி மகன் சக்திவேல் கேலி, செய்துள்ளார். இதையறிந்த மாரியப்பன் சக்திவேலை அழைத்துபேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முன்விரோதம் கொண்ட சக்திவேல் ஒருவாரம் கழித்து நேற்று மாரியப்பன் அங்குள்ள மின் இணைப்பு கொடுக்கும் தொழிலாளருக்கு உதவியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கத்தியுடன் வந்த சக்திவேல் மாரியப்பனை தரக்குறைவாக பேசி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து, பின் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மாரியப்பன் மனைவி தமிழ்ச்செல்வி (35) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்