SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று நடக்கிறது சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசை கட்டிப்பிடித்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

12/12/2018 6:11:19 AM

திருச்சி, டிச.12:  திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் இரவு நேர பணியிலிருந்த பெண் போலீசை கட்டிப்பிடித்த சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.
 தமிழக காவல்துறையில் பணியில் உள்ள போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை பணி பளு காரணமாக மனம் சோர்வடைந்து மனதளவில் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதில் தற்கொலை வரை ெசல்வது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காவல்துறை மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்பங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மனச்சோர்வை போக்கும் விதமாக காவலர் நல்பயிற்சி கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டு 3 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு மன சோர்வு மற்றும் குடும்ப பிரச்னையில் இருந்து விடுபடவும், ஆலோசனைகளும் யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

 இது ஒருபுறமிருக்க சிறப்பு எஸ்ஐ ஒருவர் நள்ளிரவு சக பெண் போலீசை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்கள் பணியில் உள்ளனர். ேநற்று முன்தினம் இரவு பணியில் ெகாடாப்பை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) இருந்துள்ளார். அதுபோல் கணினி பிரிவில் திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்த சூரியகலா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரவு பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த சிறப்பு எஸ்ஐ பாலசுப்பிரமணி சோமரசம்பேட்டை பகுதியில் ரோந்து பணி முடிந்து காவல் நிலையம் வந்து ேசர்ந்தார். அங்கு பெண் போலீஸ் சூரியகலா மட்டும் கணினியில் வழக்கு சம்மந்தமாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் அமர்ந்த பாலசுப்பிரமணி அவரிடம் பேச்சு ெகாடுத்தார். குளிர் மாதம் என்பதால் பனி அதிகமாக உள்ளது என இரட்டை அர்த்தத்தில் பேசிய பாலசுப்பிரமணி சூரியகலாவின் இடது கையை பற்றினார். இதில் அதிர்ச்சியடைந்த சூரியகலா என்ன சார்? என கேட்டார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் சூரியகலாவை கட்டிப்பிடித்த பாலசுப்பிரமணி, அவரது கன்னத்தில் முத்தமழை பொழிந்தார். இச்செயலை சற்றும் எதிர்பாராத சூரியகலா அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறி காவல்நிலையத்தின் வெளியே வந்தார். இதற்கிடையில் சிறிது நேரம் அங்கிருந்த பாலசுப்பிரமணி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார்.   இந்நிலையில் பணி முடிந்த பின் சூரியகலா நேற்று திருச்சி மாவட்டம் எஸ்பி அலுவலகம் சென்று எஸ்பி ஜியாவுல்ஹக்கிடம் இதுபற்றி புகார் அளித்தார். அதனை தொடர்ந்து நேற்றிரவு சிறப்பு எஸ்ஐ பாலசுப்பிரமணியை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். சக போலீசாருக்கு பாலியல் கொடுமை நடந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறப்பு எஸ்ஐ பாலசுப்பிரமணிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்