SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 11ம் தேதி நடத்த முடிவு

12/7/2018 6:08:10 AM

திருவாரூர், டிச.7:கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரி வரும் 11ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியன், முருகானந்தம், தமிழ்மணி, சேகர், குமார்ராஜா, கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். முகாம்களில் தங்கி இருப்பவர்களை மாற்று இடம் ஏற்பாட்டுடன் காலி செய்ய வேண்டும், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், நெல் மற்றும் பணப் பயிர்கள் பாதிப்பு மற்றும் கால்நடைகள் இறப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அனைத்து பகுதிகளுக்கும் துரிதமான மின் இணைப்பு வழங்க வேண்டும், சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனே சீரமைக்க வேண்டும், மாணவருக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்