SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறை நகரில் காணாமல் போகும் கன்னி வாய்க்கால் மீட்க பொதுமக்கள் கோரிக்கை

12/7/2018 1:16:28 AM

மயிலாடுதுறை,டிச.7: மயிலாடுதுறை நகரில் காணாமல் போகும் கன்னி வாய்க்காலை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் இருந்த 100க்கும் மேற்பட்ட குளங்களில் தற்பொழுது நகராட்சி கணக்கில் உள்ளது. 83 மட்டுமே, அதில் பாதி குளங்கள் காணாமல் போய்விட்டன, மீத குளங்களிலேயே பாதிகுளங்களில் தண்ணீரே இல்லை, மீதமுள்ள குளங்கள் பகுதி பகுதியாக ஆக்கிரமிப்பிற்குள்ளாகிவிட்டது, தென்னக பசுமை தீர்ப்பாயத்தில் மயிலாடுதுறை விஜயகுமார் என்பவர் தொடுத்த வழக்கின் பயனாக பழங்காவிரி தூர்வாரப்பட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள ஒருசில குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. அதுவும் கிளை சிறைச்சாலைக்கு பின்பக்கம் உள்ள மட்டகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல தனியார் தொன்டுநிறுவனத்தின் பங்களிப்பில் செலவுசெய்து பொக்லைன் இயந்திரம் கொண்டு நீர்செல்லும் பாதையை சரிசெய்யப்பட்டது.   பழங்காவிரியிலிருந்து மட்ட குளத்திற்கு தண்ணீர் செல்லவில்லை, பாதையைவிட பழங்காவிரி பள்ளமாக இருந்ததால்,  பட்டமங்கல வீதியில் பழங்காவிரி குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி அதில் காவிரி நீரை தேக்கி தேங்கிய நீரை மட்டகுளத்திற்குத்திருப்பி விடப்பட்டுள்ளது, குளம் நிரம்பியது,  அதுவும் ஒருசில மாதங்களில் பாதிக்கும்மேல் தண்ணீர் குறைந்துவிட்டது, இதுபோன்ற நடவடிக்கையால்  மயிலாடுதுறையில்   நிலத்தடி நீர் மட்டம் வருடந்தோறும் குறைந்துவரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு நீர்மட்டம் குறைவதில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரில் காணாமல் போன குளங்களை போன்று மயிலாடுதுறையில் ஆங்காங்கே ஓடும் சின்னஞ்சிறிய வாய்க்கால்களும் காணாமல் போவதுடன் அந்த இடமும் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி வருகிறது, அதை கவனிக்கவேண்டிய வருவாய்துறையினர் தனக்கென்ன என்று சும்மா இருந்து விடுகின்றனர், ஆக்கிரமித்துள்ளவர் முக்கிய புள்ளி என்றால் அந்தப்பக்கமே வருவாய்துறையினர் திரும்பவேமாட்டார்கள், மயிலாடுறை மணல்மேடு சாலையில் திருஇந்தளூர் பகுதி ஆரம்பித்ததும் சாலையின் மேற்புறத்தில் காணப்படுவது சிறிய கன்னிவாய்க்கால், இது முழுமையாகக் காணாமல் போய்விட்டது, முத்தப்பன்காவிரியிலிருந்து ஆறு பிரிந்து நகராட்சி பொதுமயானக்கொட்டகையைக் கடந்து தோப்புத்தெருவில்  சிறு கன்னியாகப் பிரிந்து  திருஇந்தளூர் சாலையை தாண்டிபரிமளரெங்கநாதர் பூக்கொல்லைக்கு தண்ணீர் கொண்டுசென்ற கன்னிவாய்க்கால் இன்றைக்கு முழுவதுமாக தூர்க்கப்பட்டு மழைநீர் வடிகால் இருந்த சுவடுபோன்ற தற்பொழுது தென்படுகிறது.  அந்த கன்னிவழியாக அப்பகுதி மக்கள் நடந்துசென்று அப்பகுதியில் உள்ள நாகம்மாள் கோயிலுக்குச் செல்ல முற்பட்டபோது பொதுப்பணித்துறையினர் தடுத்துள்ளனர்,  பல மாதமாக அப்படியே கிடந்த அந்தக்கன்னி தற்பொழுது தனியார் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகிவிட்டது.   அந்த சிறிய வாய்க்காலை மீட்டு அதில் தண்ணீர் விடவேண்டும் அல்லது பொதுப்பணித்துறையினர் அதை கைப்பற்றவேண்டும்  வருவாய்துறையினர் இந்த வாய்க்காலை கண்டுபிடித்து ஆக்கிரமிப்புக்களை அகற்றி வாய்க்காலை சரிசெய்து திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர் ஆலய பூக்கொல்லை பகுதிக்கு தண்ணீர் செல்ல வழியை ஏற்படுத்தவேண்டும், அந்தப்பகுதியில் பக்தர்கள் சென்று கோயிலில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்  என்று திருஇந்தளூர் பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்