SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயங்கொண்டம் அருகே முகத்தில் மயக்க பொடி தூவி கைவரிசை பெண்ணின் காதை அறுத்து கம்மலை பறித்த ஆட்டோ டிரைவர் கைது

12/7/2018 12:50:51 AM

ஜெயங்கொண்டம், டிச. 7: ஜெயங்கொண்டம்  அருகே சித்தாள் வேலைக்கு அழைத்து சென்று மயக்கபொடி தூவி காதை அறுத்து பெண்ணிடம் கம்மலை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி  வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர்  மேலவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புஷ்பவள்ளி(55).  இவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒருமகனும்  உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி அனைவரும் தனித்தனியே  வசித்து வருகின்றனர். புஷ்பவள்ளியின் கணவர் ரங்கநாதன் நோய்வாய்ப்பட்டு  வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளதால் புஷ்பவள்ளி சித்தாள் வேலைக்கு சென்று  குடும்பத்தை நடத்தி கணவரையும் பராமரித்து வருகிறார். இந்நிலையில்  ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலை காந்திபூங்கா அருகில் சித்தாள் வேலைக்கு  செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்  ஒருவர் தான் சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி மதனத்தூர்  கொள்ளிடக்கரை பகுதிக்கு அழைத்து சென்று அங்கு உள்ள ஒரு கருவேல மரக்காட்டில்  வைத்து புஷ்பவள்ளியின் கழுத்தை நெரித்து முகத்தில் மயக்கபொடி தூவி இரண்டு  காதுகளிலும் இருந்த முக்கால் பவுன் கம்மல்களை அறுத்து கொண்டு தப்பி  ஓடிவிட்டார்.

இதில் புஷ்பவள்ளி மயங்கி கிடந்துள்ளார். அப்பகுதியில்  ஆடு மேய்த்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். மயக்கம்  தெளிந்து எழுந்து பார்த்தபோது இரண்டு காதுகளும் அறுந்து ரத்தம்  வந்துள்ளது. அவரது காதில் இருந்த கம்மல்கள் காணாமல் போயிருந்தது கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து  தா.பழூர் போலீசார் விசாரணை செய்ததில் அவரை அழைத்து சென்றவர் கும்பகோணம்  அருகே உள்ள ஏராகரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் என்பது  தெரிய வந்தது. அவரை விசாரணை செய்ததில் புஷ்பவள்ளி அணிந்திருந்தது கவரிங்  தோடு என்பதும் தெரியவந்தது.

பள்ளி ஊழியருக்கு மிரட்டல்:ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(57).  இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் ராஜேந்திரன்,  பரமசிவம் மகன் கண்ணன் ஆகிய இருவரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று  மாற்று சான்றிதழ் கேட்டுள்ளனர். அப்போது குணசேகரன் உடையார்பாளையம் தாலுகா  அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியரிடம் மனு பெற்று வந்த பின்னர் தான்  மாற்றுசான்றிதழ் தரப்படும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ராஜேந்திரன், கண்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து குணசேகரனை தகதவார்த்தைகளால்  திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து உடையார்பாளையம் காவல்  நிலையத்தில் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மலரழகன்  வழக்கு பதிந்து ராஜேந்திரன், கண்ணன் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

 • iraqboatacc

  ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்