SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை... மருந்துகள் இல்லை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

12/6/2018 3:05:41 AM

மதுரை, டிச. 6: மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி 10,14 மற்றும் 15வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மேலப்பொன்னகரம் 2வது தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், பொன்னகரம் பிராட்வே ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய மருத்துவர் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் இல்லாததால் பொதுமக்கள் சிகிச்சை பெற சிக்கலாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகரிடம் மார்க்சிஸ்ட் பகுதிகுழு செயலாளர் ஸ்டாலின் தலைமையில் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்தனர்
.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணல்மேடு ஆரம்ப சுகாதார மையம் கடந்த 1967ல் துவங்கப்பட்டது. அதே மருத்துவமனையில் காசநோய் பிரிவு உருவாக்கப்பட்டது. இங்கு தினசரி 150க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வருகின்றனர். பிற ஆரம்ப சுகாதாரமையங்களில் இருந்து மருத்துகளை பெற்று வந்து நோயாளிகளுக்கு தருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருந்துவ உபகரணங்கள், மருந்துகளை இருப்பு வைக்க ேவண்டும்’ என தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்