வாலிபர் கழுத்து அறுப்பு
12/6/2018 2:54:42 AM
சேலம், டிச.6: சேலம் ஆண்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் அரவிந்த்(25). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. ‘வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது, தெரிந்த நபர் ஒருவர் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்’ என போலீசாரிடம் தெரிவித்தார். அவர் யார்? எதற்காக பிளேடால் கழுத்தை அறுத்தார் என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட வாலிபர் அரவிந்த், புகார் வேண்டாம் என எழுதி ெகாடுத்து விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பனி, சுட்டெரிக்கும் வெயிலால் செடியிலேயே கருகும் குண்டுமல்லி மொட்டுகள்
ஆத்தூர் அருகே போலி வாரிசு சான்று மூலம் ₹50 லட்சம், 50 பவுன் மோசடி
சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் வழங்கும் இயந்திரத்தை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி
காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை
நங்கவள்ளி அருகே அரசுத்துறை கண்காட்சியில் தெர்மாகோல் பயன்பாடு