SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா

12/6/2018 1:30:37 AM

விழுப்புரம், டிச. 6: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்டம் விட்டு மாறுதல் வழங்க வேண்டும். அனைவருக்கும் லேப் டாப்புடன் கூடிய இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும். கூடுதல் கிராமங்களை நிர்வகிக்கும் விஏஓக்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு பட்டப்படிப்பை கல்வித்தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக மாற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம கணக்குகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பது, ஒரு நாள் விடுப்பு போராட்டம், இணையதள சான்றிதழ் பணிகள் புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து தாலுகாவிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. வட்டத்தலைவர் லட்சுமணன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் கமலநாதன், அமைப்பு செயலாளர் ருத்திரவேல், இணை செலயாளர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முன்னாள் கிராம அலுவலர் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். தர்ணா போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்