SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி

12/4/2018 5:52:05 AM

கோவை, டிச.4:  கோவை அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அத்திபாளையம் ஸ்ரீரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது.  ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் 2018-19ம் கல்வியாண்டில் ‘சயின்டிக் சொல்யூசன் பார் சேலஞ்சஸ் இன் லைப்’ எனும் தலைப்பின் கீழ் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்களிடையே செயல்முறை கற்றலை வளப்படுத்துதல், புதிய தொழில் நுட்பத்தை கையாளுதல், ஆராய தெரிந்து கொள்ள கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்கள் 292 பேர் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கண்காட்சியை துவக்கிவைத்தார். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில், சமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்