விவசாய நிலங்களில் புகுந்து யானை அட்டகாசம் கோவை தடாகத்தில் நிபுணர் ஆய்வு
12/4/2018 5:51:54 AM
கோவை, டிச.4: கோவை தடாகம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. தொடர்ந்து அதே பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானையை வனத்துறையினர் விரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஒருதரப்பினரும், யானையை பிடிக்க கூடாது என சமூகஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், யானை விவகாரம் குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதுமலையில் இருந்து வசீம் என்ற கும்கி யானை அழைத்து வரப்பட உள்ளது. இதற்கிடையில், யானைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நேற்று கோவை வந்தார். இவர், சர்ச்சைக்குரிய யானை நடமாட்டம் உள்ள தடாகம் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மக்களிடம் பேசினார். யானை வழித்தடங்களை பார்வையிட்ட பின்னர், வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, காட்டு யானையை பற்றி ஆய்வு நடத்தி அவர் தனது முடிவை தெரிவிப்பார். இதையடுத்து யானையை பிடிப்பதா அல்லது அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டப்படுமா என்பது குறித்து தெரியவரும்.
மேலும் செய்திகள்
காரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு
சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு
பஸ் மோதி காவலாளி பலி
தீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்