SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கலெக்டரிடம் மனு

11/21/2018 2:38:50 AM

திருப்பூர்,நவ.  21: அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக்கோரி கலெக்டர்  பழனிச்சாமியிடம் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.  இதுகுறித்து  அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பினர் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு- அவிநாசி குடிநீர் திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி  வருகின்றனர். தற்போது, இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.1,800 கோடி நிதி  ஒதுக்கியும் அதற்கான பணிகள் துவங்கவில்லை.
 இத்திட்டத்திற்காக,  2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டு குழுவினர், விவசாயிகள், காலவரையற்ற  உண்ணாவிரத போராட்டம், மறியல், முற்றுகை என தொடர் போராட்டங்களை நடத்தினர்.  

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட, 17 பேர் மீது, அவிநாசி போலீசார் வழக்கு  பதிவு செய்தனர். அரசாணை வெளியான பின், வழக்கும் வாபஸ் பெறப்படும் என  அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை வழக்குகள் திரும்ப  பெறப்படவில்லை. அதிகாரிகள் வாக்களித்தபடி, போராட்டக்குழுவினர் மீது  போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டது.  ஆனால், வழக்குகள் வாபஸ் பெறவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் போராட்ட குழுவினர்  மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்