SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கயத்தில் கடத்திய லாரி காரணம்பேட்டையில் சிக்கியது

11/21/2018 2:38:42 AM

காங்கயம், நவ.21: காங்கயத்தில் இருந்து கடத்தி சென்ற லாரி காரணம்பேட்டையில் நிறுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   காங்கயம் உடையார் காலனியை சேர்ந்த முத்துசாமி என்பபவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை கடந்த 18ம் தேதி காங்கயம்- கரூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தியிருந்த போது மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் முத்துசாமி காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு லாரியை தேடி வந்த போது, அந்த லாரி பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் ஒரு கடையின் முன்பு நின்றிருந்தது. இதேபோல, ஏற்கனவே காங்கயம்-கோவை ரோட்டை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான லாரி கடந்த 1ம் தேதி அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன் உரிமையாளர் லாரியை காணவில்லை என அக்கம், பக்கத்தில் விசாரித்த போது  யாரோ இரண்டு நபர்கள் லாரியை எடுத்து சென்றது தெரியவந்தது. லாரியை கடத்தி சென்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி சென்றது தெரியவந்தது.  கடந்த ஒரு மாதத்தில் இரண்டு லாரிகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றதும். அவற்றை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது குறித்தும் காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்