SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டல் மண் எடுக்க அனுமதிக்க சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு

11/21/2018 2:38:34 AM

திருப்பூர், நவ.21: திருப்பூரில் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதன் விவரம்:
திருப்பூர் தெற்கு வட்டம், மங்கலம்  வேட்டுவபாளையம் குளம் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் பொதுப்பணித்துறைக்கு உள்ளடக்கியது.
இக்குளத்தில் தண்ணீர் நிறைந்தால் மங்கலம் பகுதிகளில் கணபதிபாளையம், எம்.செட்டிபாளையம், ஆட்டையம்பாளையம் மற்றும் பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும்.எனவே, வண்டல் மற்றும் செம்மண் அள்ளி ஆழப்படுத்தினால் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால், மங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்  பயனடைவர்கள்.  எனவே, இக்களத்தில் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு இருப்பதால் விடுபட்ட பகுதிகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலிபாளையம் பகுதியில் கால்நடைகளுக்கான மருந்தகம், கிராமப்புற பகுதிகளுக்கு மொபைல் மருத்துவ வசதி போன்றவற்றை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு அதிகாரிகள் நேரில் வந்து விவசாய நிலங்களை அளவீடு செய்து சென்றுள்ளனர். இவ்வாறு, அளவீடு செய்யப்பட்ட நிலத்திற்கு நிவாரணத் தொகை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றனர்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்