SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

11/21/2018 2:38:17 AM

திருப்பூர், நவ.21: வெளிநாட்டில்  வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவரை  போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.  கோவை  பாப்பநாய்க்கன்பாளையம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்த கோரிவளவன் (52),  கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் நீலேஸ்வரா பகுதியைச் சேர்ந்த விபின் வர்ஜீஸ்  ஆகியோர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி  வருகின்றனர். இவர்கள், அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தரப்படும் என போஸ்டர் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.  இதைப்பார்த்து, திருப்பூர் ஏ.கே.பி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த வினோத்  (24) தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியை தொடர்பு  கொண்டார்.

அப்போது,  பாஸ்போர்ட், விமான கட்டணம் உட்பட பல்வேறு ஆவணங்களை தயார் செய்ய முன்பணமாக  ரூ.1.50 லட்சம் தேவைப்படும். பணத்தை செலுத்தினால் வெளிநாட்டில் அதிக  சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளனர்.இதை நம்பிய வினோத்  ரூ.1.50 லட்சத்தை கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்தார். பணம் பெற்றுக்கொண்டு  வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தியதால் திருப்பூர் வடக்கு  போலீசில் வினோத்  புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட  கோரிவளவனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விபின் வர்ஜீஸை தேடி  வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்