SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராம மக்கள் கடும் அவதி காவலுக்கு ஆள் இல்லாததால் அவலம் கஜா புயல் பாதிப்பு இஸ்லாமியர்கள் உதவி

11/21/2018 1:35:33 AM

தொண்டி, நவ.21:கஜா புயலால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தெருவில் நிற்கின்றனர். இப்பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டு பல நாட்களாக இன்னும் சீர் செய்ய வில்லை. மரங்கள் சாய்ந்து கிடப்பதை அப்புறப்படுத்தவில்லை. இதனால் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு
வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கரம்பக்குடி, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ராமநாதபுரம் மாவட்ட குழு சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிரட், பால் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் களத்திற்கு சென்று சீரமைப்பு பணியில் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஈடுபட்டனர். சாலை ஓரங்களில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்துவது, தேங்கியுள்ள மழை நீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் தொண்டி தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்