SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோண்டி போட்டதோடு விட்டுவிட்டனர் ஆறு மாதமாக நடக்காத சாலைப்பணி

11/21/2018 1:35:15 AM

சிவகங்கை, நவ.21: சிவகங்கை அருகே மதுரை சாலையிலிருந்து மானாகுடி செல்லும் சாலை தோண்டப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நடைபெறாததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரமுள்ள மானாகுடி இணைப்புச்சாலை பிரிந்து செல்கிறது. மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை, முடிகண்டம், உடையநாதபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அரசு ஐடிஐ, ஸ்பைசஸ் தொழில் பூங்கா உள்ளிட்டவற்றுக்கும் இந்த சாலையே பிரதானமாகும். சிவகங்கையிலிருந்து உடையநாதபுரம் வரை செல்லும் அரசு பஸ் தினமும் நான்கு முறை இந்த சாலை வழியே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக மண்சாலையில் இருந்து தார்ச்சாலையாக இந்த சாலை மாற்றப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாய் காணப்பட்ட இச்சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது.

ஏற்கனவே இருந்த சாலையை இயந்திரம் மூலம் தோண்டினர். சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி கிராவல் மண் அடித்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்து நடக்க வேண்டிய பணிகள் எதுவும் நடைபெறாமல் சாலை மண்சாலையாக கிடக்கிறது. சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகன டயர்களை பதம் பார்க்கின்றன. மாதக்கணக்கில் சாலை, பயணம் செய்ய முடியாத நிலையில் கிடக்கிறது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்லும் கிராமத்தினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். கிராமத்தினர் கூறுகையில், ‘‘பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. பணிகள் தொடங்கி ஆறு மாதங்களான நிலையில் இதுவரை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். மண் சாலையாக மாறியுள்ளதால் மழை நேரத்தில் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஐடிஐ மாணவர்கள், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

 • largebudhastatue

  உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்