SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ ஆய்வு

11/20/2018 3:50:02 AM

ராஜபாளையம், நவ. 20: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து இருப்பு அறைக்கு சென்று பார்வையிட்டார். இது குறித்து எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கூறுகையில், ‘டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.  மருத்துவமனைக்கு தேவையான எலும்பு முறிவு மருத்துவர், லேப் டெக்னிசியன்,  செவிலியர், உதவியாளர் போன்ற பணியாளர்களை விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை சென்று மருத்துவ இயக்குநர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அவர் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட்டும், இதுவரை எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் மேற்கண்ட பணியாளர்கள் பணியமர்த்தபடவில்லை. பொதுமக்களின் நலன் கருதி பணியாளர்கள்  பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அப்போது நகர செயலாளர் ராமமூர்த்தி, துணைச்செயலாளர் சரவணன், செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்