SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனு வாங்கும் பிரிவில் தவறான நேர அறிவிப்பால் பொதுமக்கள் பரிதவிப்பு

11/20/2018 3:49:52 AM

விருதுநகர், நவ. 20: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் மனு அளித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை என எழுதப்பட்டுள்ளது. ஆனால், திங்கட்கிழமைகளில் மனுக்கள் பதிவு காலை 10 முதல் மதியம் 1 மணி வரை தான் நடைபெறுகிறது. இந்நிலையில் தவறான பதிவாக காலை 8 முதல் மாலை 8 மணி எழுதி பதிவு செய்துள்ளனர். காலை 8 மணி முதல் என்ற பதிவினை நம்பி திங்கட்கிழமைகளில் காலை 8 மணிக்கு மனுதாரர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. கலெக்டர் அலுவலக பின்புற வாசல் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் முறையாக பராமரிப்பின்றி துநாற்றம் வீசுகிறது. இதனால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் திறந்த வெளிகளை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து பிரைட்சிங் என்பவர் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகத்தில் மனு பதிவு செய்யும் இடத்தில் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி என பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மனு பதிவு செய்ய வரும் அலுவலர்கள் 10 மணிக்கு மேல் தான் வருகின்றனர். பதிவு தவறா, இல்லை அலுவலர்கள் வேலைக்கு வரும் நேரம் தவறா என தெரியவில்லை. மேலும் கலெக்டர் அலுவலக வெளிப்புற கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் அதிகம் வந்து செல்லும் திங்கட்கிழமையாவது தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்