SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரத்தில் முறையான வடிகால் வசதி இல்லை தேங்கும் மழைநீரில் நீந்தி செல்லும் வாகனங்கள்

11/16/2018 2:49:18 AM

காஞ்சிபுரம், நவ.16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்து. இந்நிலையில் மழை தொடங்கிய முதல் நாளிலே முறையான வடிகால் வசதி இல்லாததால் நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். வடகிழக்குப் பருவமழை முழுமையாக தொடங்குவதற்குள் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வடிகால்களை துரிதமாகச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்காத நிலையில் கஜா புயல்  கடலூர் - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடப்பதால் பரவலாக மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய மழையால் காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பம் ஏனாத்தூர் சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டுத்தெரு, செட்டித் தெரு, காமராசர் சாலையில் பஸ் நிலையம் அருகில், ரெட்டை மண்டபம் பகுதி உள்ளிட்ட  பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

விளக்கடி கோயில் தெரு பகுதியில் தேங்கிய மழைநீரில் அவ்வழியாகச் சென்ற பேருந்துகள் நீந்திச் சென்றன. மேட்டுத்தெரு, செட்டித்தெரு பகுதிகளில் அதிக அளவில் தேங்கி நின்ற மழைநீரால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். பஸ் நிலையம் அருகில் ரெட்டை மண்டபம் பகுதியில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் வந்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.  கஜா புயல் குறித்த அறிவிப்பு  முன்னரே வெளியான போதும் முறையாக கால்வாய்கள் அடைப்பு நீக்கப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் நகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகள் அடைத்துக் கொண்டு கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கியுள்ளது.

மேலும் திருக்காலிமேடு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு கால்வாய் குப்பை மேடாகவே காட்சி அளிக்கிறது. மேலும் திருக்காலிமேடு பள்ளி அருகில் கழிவுநீர் கால்வாய் பக்கவாட்டுச் சுவர் உடைந்து கழிவுநீர் வெளியேறாமால் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது. இதேபோன்று மின்நகர் பகுதியிலும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிதளவு மழை பெய்தாலும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. அதிக மழை வருவதற்குள் உடனடியாக கால்வாய் அடைப்புகளை நீக்கி, முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 இதேபோன்று மாவட்டம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம் நகராட்சிகள், மறைமலைநகர், உத்திரமேரூர், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர்  ஆங்காங்கே தேங்கியுள்ளது.  தொடர்ந்து அதிகமழை பெய்தால் என்ன நிலையோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் உடனடியாகச் செயல்பட்டு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்