SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழவனங்குடி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த குப்பைகள் அகற்றம்

11/16/2018 2:30:06 AM

திருவாரூர், நவ.16: திருவாரூரில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக பழவனங்குடி பாசன வாய்க்காலில் உள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.  திருவாரூர் மாவட்டத்தில் பொதுப் பணி துறையின் கட்டுபாட்டில் இருந்து வரும் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு காரணமாக அதன் பரப்பளவு சுருங்கி வருவதை பொதுப் பணிதுறை அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தினால் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் நகரில் செல்லும் ஓடம்போக்கி ஆற்றின் கரையோரத்திலும் இருபுறமும் அரசியல் வாதிகள் முதல் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் தங்கள் இஷ்டத்திற்கு ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து மிகப்பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி இந்த வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளுமே இந்த ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் மலை போல் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசப்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நகரில்  பேருந்து நிலையம் அருகே ஓடம்போக்கி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பழவனக்குடி பாசன வாய்க்காலை அடிப்படையாகக் கொண்டு பழவனக்குடி, கொச்சக்குடி, கூத்தங்குடி,  எழுவேலி, இருவேலி, மருதப்பட்டினம், பிளாவடிமூளை மற்றும் நத்தம் உட்பட 8 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் இதுபோன்று ஆக்கிரமிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக கடந்த 7வருடமாக தண்ணீர் வராததால் பல்வேறு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீதமுள்ள சுமார் 700 ஏக்கரில் மட்டும் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கும் நடப்பாண்டில் இந்த வாய்க்காலில் தண்ணீர் விடாததன் காரணமாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதனை பொதுப்பணித் துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த மாதம் 5ம் தேதி திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிடாரங்கொண்டான் என்ற இடம் அருகே மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட பொதுப்பணி துறையினர் வாய்க்காலை சுத்தம் செய்து நீர் விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின்னர் ஒரு மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாதததால் இந்த வாய்க்காலை உடனே சுத்தம் செய்து நீர் விடாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக கடந்த 8ந் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் நகரில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்காக  கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நகராட்சி ஊழியர்கள் மூலம் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் இதற்கு காரணமான தினகரன் நாளிதழுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்