SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 72 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

11/16/2018 2:06:12 AM

கிருஷ்ணகிரி, நவ.16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் 1098 சைல்டு லைன் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சைல்டுலைன் ஆற்காட் நிறுவன இயக்குனர் கேசவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் சரவணன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் வின்சென்ட சுந்தர்ராஜ், திட்ட மேலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி பங்கேற்று பேசியதாவது: சைல்டுலைன் 1098 ஒருங்கிணைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு திட்டமாகும். 1098 என்பது 18 வயது வரை பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான, கட்டணமில்லாத இலவச அவசர 24 மணி நேர தொலைபேசி எண் ஆகும். துன்பத்திற்கு உள்ளான குழந்தைகளை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆற்காட் தொண்டு நிறுவனம் சைல்டுலைன் திட்டத்தினை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. கடந்த 13ம் தேதி முதல் வருகிற 19ம் தேதி வரை சைல்டு லைன் சார்பில், தேசிய அளவில் குழந்தைகளின் “என் நண்பன்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 659 குழந்தைகளுக்கும், 6 ஆண்டுகளில் 2,327 குழந்தைகளுக்கும் பல்வேறு விதமான ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து நடப்பாண்டில் 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பள்ளி படிப்பிலிருந்து பாதியில் நின்ற 62 குழந்தைளை, மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கெதிரான செயல்களை தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
அண்டை மாவட்டமான தர்மபுரியை காட்டிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அந்த அளவிற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை 180 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த 13ம் தேதி சமூக நல அலுவலரான நாகலட்சுமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்