ரயில், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
11/16/2018 1:40:56 AM
மதுரை, நவ. 16: மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்மநபர், ‘இன்னும் சிறிது நேரத்தில் மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’ என கூறிவிட்டு போனை “கட்” செய்து விட்டார். இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
ஆனால், சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் ரயில் நிலையத்தில் நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு ஒரு மணி நேரம் அதிகாரிகளும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருமங்கலம் பஸ் நிலையத்தில் இடநெருக்கடியால் திணறும் அரசு பஸ் டிரைவர்கள்
மாநில டெபிள் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு மதுரை, காஞ்சிபுரம் அணிகள் தகுதி
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
மூன்றுமாவடி-அய்யர்பங்களா இடையே நடுரோட்டில் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்
கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் வைகையில் நீர் ஆவியாவது அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு