SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு கொசுவை ஒழிக்க 1,170 பணியாளர்கள் தீவிரம்

11/8/2018 3:03:24 AM

திருச்சி, நவ.8:  திருச்சி  மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்புத் தொடா்பாக சுகாதாரத் துறை அலுவலா–்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அலுவலகங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் சூழல் ஏதுமில்லையென அறிக்கை பெற வேண்டும். மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் மற்றும் நோயாளிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி  உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  அரசு மருத்துவமனை வார்டில் உள்நோயாளிகள் பிரிவில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளுக்கு தனித்தனி பிரிவாக சிகிச்சை அளிக்க வேண்டும்.  மாவட்டத்தில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைத்துகொள்ள வேண்டும். சித்த மருத்துவர் பொதுமக்களுக்கு விழிப்புணா–்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.  உள்ளாட்சி துறையின் மூலம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமாரிக்க வேண்டும். திடக்கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும்.  பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை அந்தந்த உள்ளாட்சித் துறை அலுவலா–்கள் உறுதி செய்ய வேண்டும்.
 டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் ஒரு வட்டாரத்திற்கு 30 நபா்கள் வீதம் 420 பணியாளா–்களும், ஒரு பேருராட்சிக்கு 10 பணியாளா–்கள் வீதம் 14 பேரூராட்சிகளில் 160 பணியாளா–்களும், மாநகராட்சியில் 590 பணியாளா–்களும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.  காய்ச்சல் அதிகம் பாதிப்புள்ள மாநகராட்சி, வட்டாரம், பேருராட்சி , நகராட்சி ஆகிய பகுதிகளில் கண்டறிந்து சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்–்கைகளை சுகாதாரத்துறையினா் மேற்கொள்ள வேண்டும். போதுமான அளவு கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் கொசு மருந்துகளை கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும்.  பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா–்கள், பேராசிரியா–்கள்  மாணவ,மாணவிகளுக்கு டெங்கு  காய்ச்சல் தொடா்பான விழிப்புணா–்வை ஏற்படுத்த வேண்டும்.  மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு சுகாராத்துறையினா் சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
  இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ சாந்தி , மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராமகிருட்டினன்,  அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அனிதா, துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்