SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு பொறி விழுந்து நூல் குடோனில் தீ விபத்து

11/8/2018 1:49:07 AM

சேலம், நவ.8: சேலத்தில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்ததில், குடோனில் இருந்த நூல்கள் கருகின.சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோயில்மேடு, 4வது தெருவை சேர்ந்தவர் அனில்குமார்(41). அதே பகுதியில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள குடிசையை நூல்குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 8மணியளவில் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றதோடு, தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
 செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில்,  சில ஆயிரம் மதிப்புள்ள நூல்கட்டுகள் எரிந்து நாசமானது.  

இதேபோல் தாதாகப்பட்டி உழவர் சந்தை எதிரேயுள்ள பெரியார் குடியிருப்பிலும், பட்டாசு தீப்பொறி விழுந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் அருகே வாலிபர்கள் சிலர், ராக்கெட் வெடியை கொளுத்தி உள்ளனர். அதில் இருந்து பரவிய தீப்பொறியே தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்