SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரிமண் கடத்திய 2 லாரி பறிமுதல் திருவண்ணாமலை அருகே

10/17/2018 1:04:02 AM

திருவண்ணாமலை, அக்.17: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கருமாரப்பட்டி கிராமம் அருகே உள்ள ஏரியிலிருந்து அனுமதியில்லாமல் மண் கடத்துவதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் ேபாலீசார் நேற்று முன்தினம் கருமாரப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை நடத்தினர்.அப்போது, அனுமதியின்றி மண் கடத்தி ஊத்தாங்கால் கிராமத்தில் உள்ள சம்பத் என்பவரின் செங்கல் சூளைக்கு எடுத்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரிகளை மண்னுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிந்து அம்மங்கல்ஓடை கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜா, மற்றொரு லாரியின் உரிமையாளர் மங்கலம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த தங்கராஜ், செங்கல் சூளை உரிமையாளர் சம்பத் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்