SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு கொசு புழுக்கள் இருந்தால் 24ம் தேதி முதல் அபராதம் கலெக்டர் எச்சரிக்கை அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில்

10/17/2018 1:03:49 AM

திருவண்ணாமலை, அக்.17: திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். மேலும், கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.அதன்படி, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது, பஸ் நிலையத்தின் திறந்தவெளி பகுதிகள் மற்றும் கடைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் ஆபத்து உள்ளதால், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி ஊழியர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.மேலும், சுகாதாரமின்றி காணப்பட்ட பொது கழிப்பறையை பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் கழிப்பறையைக்கூட தூய்மையாக பரமாரிக்க முடியாதா என நகராட்சி ஊழியர்களை எச்சரித்தார். தொடர்ந்து, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது: டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 கண்காணிப்பு அலுவலவர்கள், 18 மண்டல அலுவலர்கள் இப்பணியை கண்காணிக்கின்றனர்.கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 21.43 லட்சம் அரசு ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் தனி வீடுகள், வணிக கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது ஆய்வில் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இது, வரும் 24ம் தேதி முதல் அபராதம் விதிப்பது நடைமுறைக்கு வருகிறது.தனி வீடுகளுக்கு ₹150, அடுக்கு மாடி வீடுகளுக்கு ₹500, வணிக கட்டிடங்களுக்கு ₹10 ஆயிரம், தொழில் நிறுவனங்களுக்கு ₹25 ஆயிரம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ₹25 ஆயிரம் முதல் ₹1 லட்சம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ₹25 ஆயிரம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ₹500, நட்சத்திர விடுதிகளுக்கு ₹1 லட்சம், அரசு அலுவலகங்களுக்கு ₹10 ஆயிரம் வீதம் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அடுத்தடுத்த முறையும் இதேபோல் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அபராதம் பல மடங்கு உயரும். தொடர்ந்து 3 முறைக்கு மேல் குறைகள் கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

 • iraqboatacc

  ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்