SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அரசை கண்டித்து தடையை மீறி துண்டு பிரசுரம் வழங்கிய 500 திமுகவினர் கைது

10/11/2018 12:11:53 AM

தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில், அதிமுக அரசின் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் நடவடிக்கையை கண்டித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை வண்ணாரப்பேட்டை, டி.எச். சாலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி கலந்து கொண்டு, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், ராயபுரம் பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், ஆர்கே நகர் முன்னாள் பகுதி செயலாளர் மருதுகணேஷ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக, துண்டு பிரசுரங்கள் வழங்குவதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அந்த தடையை மீறி திமுகவினர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதால், மாவட்ட செயலாளர் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்