SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

10/11/2018 12:11:44 AM

வியாசர்பாடி: வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர், அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் நுழைவு வாயிலின் முன் திரண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். யுஜிசி கலைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு 1000 கோடியை மத்திய அரசு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, ‘எங்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்காவிட்டால், அனைத்து மாணவர்களும் ஒன்றுகூடி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என கூறி கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்