SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறுங்குடியில் சூறைக்காற்றுடன் மழை 20 ஆயிரம் வாழைகள் நாசம்

9/26/2018 1:27:55 AM

களக்காடு,செப்.26:  திருக்குறுங்குடியில் சூறை காற்றுடன் பெய்த மழையினால் 20 ஆயிரம் வாழைகள் நாசமாயின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பகுதியில் நேற்று மாலை திடீர் என மழை பெய்தது. அப்போது பயங்கர சூறை காற்றும் வீசியது. இந்த காற்றில் திருக்குறுங்குடி பெரியகுளம் பத்துக்காடு மற்றும் சுற்றுபுறப்பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமாயின.  நாசமான வாழைகள் ஏத்தன் வகையை சேர்ந்த 6 மாத வாழைகள் ஆகும். உரிய நேரத்தில் உரமிட்டும், தண்ணீர் பாய்த்தும் பாதுகாத்து வந்த வாழைகள் குலை தள்ளும் நிலையில் காற்றினால் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கீடு செய்து நாசமான வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏர்வாடி: ஏர்வாடியில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஏர்வாடி புதுமனையில் உள்ள மாசானமுத்து மற்றும் உய்க்காட்டு சுடலைமாடசாமி கோயிலில் கொடைவிழாவுக்காக போடப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்தது. ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்