SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரைவரை தாக்கிய வனத்துறையை கண்டித்து பாபநாசம் சோதனை சாவடியில் 35 வேன்களை நிறுத்தி போராட்டம்

9/26/2018 1:27:48 AM

வி.கே.புரம், செப். 26:  காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்று திரும்பிய டிரைவரை தாக்கிய வனத்துறையினரை கண்டித்து பாபநாசம் சோதனை சாவடியில் 35 வேன்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து பாஜ, இந்து அமைப்பினர் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக 12 கிடாக்கள் மற்றும் படையல் பொருட்களுடன் 35 வேன்களில் நேற்று அதிகாலை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு புறப்பட்டனர். இவர்கள், பாபநாசம் சோதனை சாவடி மற்றும் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து கோயிலுக்கு சென்றனர். இன்று(26ம் தேதி) மதியம் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தபடியே பக்தர்கள் குழுவினர், அங்கேயே தங்கினர்.

இதனிடையே இரவு 7 மணியாகியும் கோயிலுக்கு சென்ற வேன்கள், மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்காததால் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது பக்தர்கள் குழுவினரிடம், மாலை 6 மணிக்கு கோயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என்ற விதிமுறையை சொல்லி, அனைத்து வாகனங்களையும் கீழே இறக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர்கள் அனைவரும், வேன்களை எடுத்துக் கொண்டு மலையில் இருந்து வரிசையாக கீழே இறங்கினர். முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் வைத்து டிரைவர்களிடம் பெயர், முகவரியை கூறும்படி வனத்துறையினர் சொல்லி உள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தின்போது சங்கரன்கோவிலை சேர்ந்த டிரைவர் மகாலிங்கசாமியை வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த டிரைவர்கள், பாபநாசம் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் வரிசையாக நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவர் மகாலிங்கசாமியை தாக்கிய வனத்துறையினர் வருத்தம் தெரிவிக்கும் வரை வாகனத்தை எடுக்க மாட்டோம் எனக்கூறி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவலறிந்த இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வி.கே.புரம் நகர தலைவர் நாகராஜன், ஆர்எஸ்எஸ் கோபால், பாஜ நகர தலைவர் தங்கேஸ்வரன் உள்பட பலர் திரண்டு சென்று பாபநாசம் சோதனை சாவடி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணிக்கு துவங்கிய போராட்டம் 10.30 மணிவரை நீடித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வி.கே.புரம் எஸ்ஐக்கள் மாரியப்பன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்ை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பாஜ மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். டிரைவர்களும், வேன்களை எடுத்துக் கொண்டு சோதனை சாவடியில் இருந்து கீழே இறங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்