புளியங்குடி ஆரியங்காவு கருப்பசாமி கோயில் பூக்குழி விழா
9/26/2018 1:27:39 AM
புளியங்குடி,செப்.26: புளியங்குடி ஆரியங்காவு கருப்பசாமி கோயில் புரட்டாசி திருவிழா வை முன்னிட்டு பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆரியங்காவு கருப்பசாமி, கற்பகவிநாயகர், சக்திமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் புரட்டாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் ஆரியங்காவு கருப்பசாமி உள்ளிட்ட
அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் முக்கிய திருவிழாவான பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது.
முன்னதாக கோயில் முன்பு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. பின்னர் 40நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியபடியும், அக்னி சட்டி எடுத்தபடியும் ‘ஓம்சக்தி பராசக்தி’ என பக்தி கோஷம் முழங்க பூக்குழி இறங்கினர். இதனை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து இன்று முளைப்பாரி எடுத்தலும், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாளை 27ம் தேதி பொங்கலிடுதலும்,அன்னதானமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைமை பூசாரி காவு மற்றும் விழாகமிட்டியினர் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாளை. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்
நெல்லையில் நீண்ட இடைவெளிக்கு பின் 3 கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன
சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
உவரி அந்தோணியார் பெருவிழாவில் நாளை சிறப்பு மாலை ஆராதனை
பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருக்குறுங்குடியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு