SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரபாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

9/19/2018 2:25:33 AM

குமாரபாளையம்,செப்.19: பெரியார்  பிறந்தநாளையொட்டி, குமாரபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் இனிப்பு  வழங்கி கொண்டாடினர். நகர தலைவர் தண்டபாணி, தலைமை தாங்கினார். இதில்  கொடியேற்றுதல், இருசக்கர வாகன பேரணி, பொன்மொழி வாசக பலகை திறப்பு, அண்ணா  சிலை, காமராஜர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காவேரி நகர் பகுதியில்  இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணியை நிர்வாகி திராவிடமணி துவக்கி  வைத்தார். காவேரி நகர், நகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர் நகர், கம்பன் நகர்  மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம்  வழங்கினர். கட்சி நிர்வாகிகள் பிடல்சேகுவாரா, சாமிநாதன், அண்ணாதுரை,  சரவணன், வைரவேல், முத்துபாண்டி, மோகன், ரேணுகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்