SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேந்தமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டை வழங்கல்

9/19/2018 2:24:35 AM

சேந்தமங்கலம், செப்.19: சேந்தமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டையை வேளாண் இணை இயக்குநர் வழங்கினார்.சேந்தமங்கலம் வட்டாரம் பொன்னர்குளம் கிராமத்தில் மண்வள அட்டையின் அடிப்படையில் உரம் பயன்படுத்துதல் பற்றிய முகாம் நடந்தது. இந்த  முகாமிற்கு வேளாண்மை நேர்முக உதவியாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார்.  இதில் இணை இயக்குநர் சேகர் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டையை  வழங்கினார். முகாமில் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கவிதா  கலந்துகொண்டு மண்வள அட்டையின் அடிப்படையில் பயிர்களுக்கு எவ்வளவு  தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இடலாம் என்றும் மண்வள அட்டையினை  பயன்படுத்தாமல், தேவைக்கு அதிகமாக உரங்களை பயன்படுத்துவதினால் ஏற்படும்  விளைவுகளை பற்றியும், மண்ணின் தன்மை மற்றும் பயிருக்கு ஏற்றவாறு உரம்  இடும்போது உர செலவுகளை குறைக்கலாம் என்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ  பாக்டீரியா. ரைசோபியம், டிரைக்கோ டெர்மா விரிடி போன்ற உயிர் உரங்கள்  மற்றும் உயிரியல் காரணிகளின் பயன்பாடுகளை பற்றியும், மண்ணின் அமிலம்  மற்றும் காரத்தன்மைகளை பற்றியும், அதனால் ஏற்படும் பயிர் பாதிப்புகளை  பற்றியும் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி சேகரித்தல் மற்றும் அதனுடைய  ஆய்வு பற்றி பிஓஎஸ் கருவியின் மூலம் ஆதார் அட்டையை பதிவு செய்து ரசீது  பெறுவது பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.இந்த முகாமில்  சேந்தமங்கலம் உதவி இயக்குநர் ஹேமலதா, மண் பரிசோதனை நிலையம் மூத்த வேளாண்மை  அலுவலர் சத்யா, கிரிப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் மாதவன், வட்டார உதவி  வேளாண் அலுவலர்கள் தொழில்நுட்ப மேலாளர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள்,  பிஜிபி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்