SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் கல்வீச்சு எதிரொலி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கடையடைப்பு பதற்றம் - போலீஸ் குவிப்பு

9/19/2018 12:15:21 AM

வந்தவாசி, செப். 19: வந்தவாசியில் நடந்த விநயாகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 36 சிலைகள் வைக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக நெமந்தக்கார தெருவில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிலை புறப்பட்டது.

வழக்கமாக ஊர்வலம் செல்லும் பாதையில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் வேறு பாதையில் ஊர்வலம் சென்றது. அப்போது அங்கு வந்த போலீசார், இந்த வழியாக ஊர்வலம் செல்ல வழியில்லை, தாலுகா அலுவலக சாலை வழியாக செல்லும்படி கூறினர். அப்போது விழா குழுவினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பழைய பஸ்நிலையம் அருகே ஊர்வலம் சென்ற போது, ஒரு பிரிவினர் விநாயகர் ஊர்வலத்தில் கற்களை வீசினர். பதிலுக்கு ஊர்வலத்தில் வந்தவர்களும் கற்களை வீசினர். இதில் அப்பகுதியில் துணிக்கடைகள் மற்றும் நகை கடைகள் சேமதானது.

இதுகுறித்து, வந்தவாசி தெற்கு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஏஜாஸ், பாஜ முன்னாள் கவுன்சிலர் ராம்குமார் உள்ளிட்ட 17 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அச்சரப்பாக்கம் சாலை, பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், அசம்பாவிதம் ஏற்படாத வகையில் எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்