SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலை கோயில்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு

9/18/2018 1:55:26 AM

சேந்தமங்கலம், செப்.18: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொல்லிமலையில்  உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயல்களில், அடிப்படை வசதிகள்  உள்ளதா என மாவட்ட நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில்  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா  என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அனுப்பவேண்டும் என மாவட்ட  நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில்,  எட்டுக்கையம்மன் கோயில், மாசி பெரியசாமி கோவில் ஆகியவற்றில் மாவட்ட முதன்மை  நீதிபதி இளவழகன், பரமத்தி மாஜிஸ்திரேட்டு தனபால் ஆகியோர் நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கோயில் பணியாளர்களுக்கு  அடையாள அட்டை, சீருடை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம்,  கழிப்பிடவசதி, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதாக  என ஆய்வு செய்தார். மேலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோயில்களில்  உடனடியாக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு  செயல் அலுவலர் ராஜகோபால், ஆய்வாளர் அம்சா ஆகியோருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்