SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கறிஞர் உண்ணாவிரதம்

9/18/2018 1:55:12 AM

சேந்தமங்கலம்,  செப்.18: புதுச்சத்திரம் அருகே பாச்சல் கிராமத்தில், அரசு மதுக்கடைகளை உடனடியாக மூடக்கோரி, வழக்கறிஞர் ெதாடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.நாமக்கல்  மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர்   தமிழ்வேந்தன்(76). இவர், விவசாயமும் செய்து வருகிறார். நேற்று தனது கிராமத்தில் உள்ள தோட்டத்தில் பந்தல் அமைத்து, உண்ணாவிரத போராட்டத்ைத தொடங்கினார். இதுகுறித்து தமிழ்வேந்தன் கூறியதாவது: சட்டம் படித்துள்ள  நான், 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் தலைவராக  பணியாற்றியுள்ளேன். தற்போது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்  மக்கள் ஒன்றிணைந்து, தங்களின் உரிமைக்காக போராட வேண்டும். இளைஞர்  சமுதாயத்தை சீரழிக்கும் மதுக்கடையை உடனடியாக மூடவேண்டும். மாணவர்களின்  மருத்துவ கனவை பாழாக்கும் நீட்தேர்வை ரத்துசெய்ய வேண்டும். அண்ணாவின் மாநில சுயாட்சி கனவை பெறவும், தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காகவும் மக்கள்  போராட முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்