அத்திக்கல் - கல்லட்டி சாலை பழுது
9/12/2018 5:41:36 AM
ஊட்டி, செப். 12: ஊட்டியில் இருந்து அத்திக்கல் வழியாக கல்லட்டி செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து தலைகுந்தா, முத்தநாடு மந்து, அத்திக்கல் வழியாக கல்லட்டி கிராமத்திற்கு ஒரு மலைப்பாதை செல்கிறது. இவ்வழித்தடத்தில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. மசினகுடி செல்லும் சுற்றுலா பயணிகள் சிலரும் இவ்வழித்தடம் வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில், இவ்வழித்தடத்தில் அத்திக்கல் முதல் கல்லட்டி வரையிலான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், பெரிய அளவிலான கற்கள் சாலையில் பரவி கிடப்பதாலும், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாலும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளங்களில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், சாலை சீரமைக்கப்படாத நிலையில், பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மலை பாதையான இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழக-கேரளா எல்லையில் மாணவிகள் விடுதி திறப்பு
மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுப்பது குறித்து 4 மாநில டிஜிபிக்கள் நாளை ஆலோசனை
சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பிளக்ஸ் ேபார்டுகள் வைக்க 15 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்
ஏரியில் மண் திட்டு அகற்றும் பணி துவக்கம்
ஊட்டி பூங்காவில் பச்சை ரோஜா சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு