SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்களுக்கும் ₹1 லட்சம் ஊதியம்

9/12/2018 5:27:13 AM

புதுச்சேரி,  செப். 12:  தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஊதியமாக வழங்க  வேண்டுமென சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.  புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் 4வது மாடியில் எம்எல்ஏக்கள்  நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம்  தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், காங்கிரஸ்  சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன், அனந்தராமன், தனவேலு, ஜெயமூர்த்தி,  எம்.என்.ஆர் பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோரும், என்.ஆர் காங்கிரசில் டிபிஆர் செல்வம், ஜெயபால், சுகுமாறன், சந்திரபிரியங்கா, கோபிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவில்  அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டனும், திமுகவில் சிவா, கீதா ஆனந்தன்,  சுயேட்சை எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கான சலுகைகள், படிகள், நலத்திட்டங்கள் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டறிந்தார். கூட்டத்தில், பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டுக்கொண்டனர். அண்டை  மாநிலமான தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே  அதற்கு நிகராக, புதுச்சேரி எம்எல்ஏக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு   சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக  சம்பளம் உயர்த்தப்படவில்லை.
தற்போது புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத  ஊதியம், சலுகைகள், படிகள் என அனைத்தையும் சேர்த்து ரூ. 48 ஆயிரம்  வழங்கப்படுகிறது. அரசின் சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தால், ரூ. 28  ஆயிரம்தான் வழங்கப்படும்.

 இதனால் மக்கள் பணியாற்றும் எம்எல்ஏக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கூட  தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் சமீபத்தில் எம்எல்ஏக்களின் ஊதியம்  ரூ. 55 ஆயிரத்தி
லிருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக  உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத  ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கோரிக்கை  விடுத்தனர். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலில் மனைகளாக பிரிக்கப்படும் போது  மேம்பாட்டு நிதி(டெவலெப்மென்ட் காஸ்ட்) என வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை எங்கே? செல்கிறது என தெரியவில்லை. இந்த தொகையை வைத்து சம்மந்தப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில்லை. இதனால்  அப்
பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எனவே  அந்த தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் தொகுதியிலே செலவு செய்ய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு  நிதியை குறிப்பிட்ட காலத்தோடு, வழங்கினால் வளர்ச்சி பணிகளை விரைந்து  மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தினர்.

 புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், எம்எல்ஏக்கள் சம்பளத்தை  தமிழகத்தை போல உடனடியாக உயர்த்திவிட முடியாது. இதற்கான சட்டவரையறை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு முறைப்படி அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு மத்திய உள்துறை அனுமதி கொடுக்கும்பட்சத்தில், சட்டசபையில், இதனை வைத்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும். மீண்டும்  குடியரசு தலைவருக்கு அனுப்பி சம்பளவு உயர்வுக்கு ஒப்புதல் பெற வேண்டும். இந்த பணிகளுக்கு குறைந்தது ஒரு ஆண்டுக்கு மேலாகி
விடும் என சட்டசபை  செயலகம் தெரிவித்துள்ளது. மிக முக்கியமான இந்த கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் சட்டசபை செயலகம் அழைப்பு விடுக்கவில்லை.  எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்தாலும், சம்பளம், சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருப்பதை  காட்டுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rivermoon

  வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

 • ParadeREhearsalRepublicDay

  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

 • alanganalloor_kaalaigal11

  வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

 • NairobiHotelAttack

  மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

 • 17-01-2019

  17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்