SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆணைய தலைவர் ஆய்வு இலுப்பூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் காயம்

9/12/2018 4:27:15 AM

இலுப்பூர், செப்.12:  இலுப்பூர் அருகே தாறுமாறாக ஓடிய கார்,  பைக் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மக்கள் திரண்டதால் தப்பியோடினார்.
  விராலிமலை சாலையில் இலுப்பூரை நோக்கி வந்த கார், மேலப்பட்டி  மின்வாரியம் அருகே வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையில் நடத்து சென்றவர்கள்  மற்றும் பைக்கில் சென்றவர்கள் மீது மோதி பின்னர் அருகில் உள்ள மரத்தில்  மோதி  நின்றது. இதில் நடந்து சென்ற மேலப்பட்டியை சேர்ந்த ரவி (42),  துரைக்கண்ணு (52) மற்றும் பைக்கில் சென்ற மலைக்குடிப்பட்டியை சேர்ந்த சிவா  மற்றும் கீழ கோத்திராப்பட்டியை சேர்ந்த முக்கன் (47) உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இதில்  துரைக்கண்ணு மற்றும் மூக்கன் ஆகியோர் இலுப்பூர்  அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேர்  புதுக்கோட்டை  மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி  வைக்கப்பட்டனர்.  இலுப்பூர் போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று  போக்குவரத்தை சீரமைத்தனர்.  தாறுமாறாக ஓடி கார் சாலையில் சென்றவர்கள் மீது  மோதிய சம்பவம் இலுப்பூரில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  இலுப்பூர் போலீசார்  விசாரனை நடத்தி வருகின்றனர்.

வாகனம் மோதி தொழிலாளி பலி: விராலிமலை புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுற்றுலா சென்று திரும்பிய கூலி தொழிலாளி பலியானார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ஜியாவுதீன்(40), கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் டெம்போ வேனில்  சென்னை, நாகை மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் மதுரை திரும்பி சென்று கொண்டிருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு  திருச்சி-மதுரை தேசிய நெடுசாலை விராலிமலை புறவழிச்சாலையில் மாதிரிபட்டி பிரிவு சாலை அருகே உள்ள பேக்கரியில் டீ குடிப்பதற்காக  வேனில் இருந்தவர்கள் இறங்கியுள்ளனர். டீ குடித்துவிட்டு மீண்டும் வேனுக்கு செல்வதற்காக ஜியாவுதீன் சாலையை கடக்க முயன்றபோது  மதுரையில் இருந்து திருச்சிக்கு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த முகமது ஜியாவுதீன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

ஆசிட் குடித்து  விஏஓ தற்கொலை:  புதுகை பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பையா மகன் அருண்குமார் (30). இவர் அன்னவாசல் அருகே பரம்பூரில் விஏஓவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து பரம்பூருக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது வரும் வழியில் புல்வயல் எனும் பகுதி அருகே காட்டிற்குள் சென்று அவர் வைத்திருந்த ஆசீட்டை குடித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்