SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வருவாய் கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம்

9/12/2018 4:23:48 AM

பெரம்பலூர்,செப்.12: பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற(14ம்தேதி)4வருவாய் கிரா மங்களில் சிறப்புமுகாம்கள் நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.  இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழகஅரசினால் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று அவர்க ளின் குறைகளைத் தீர்க்கும் வகையில், திட்டமுகாம்கள் நடத்தப்படுகின்றது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல் லாத இனங்கள்), சிட்டாநகல்கள், ஆதார் அட்டைகள்பெற பதிவுகள் செய்தல், உள்ளிட்ட உதவித்தொகை கோரிடும் மனுக்கள், ஒரேநாளில் தீர்வுகாணக் கூடிய இதர மனுக்கள்மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றையதினமே உடனடியாக பரி சீலிக்கப்பட்டு உரியஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பெறப்படும் அனைத்துமனுக்களும் கணினியில் பதிவுசெய்யப்பட்டு ஒப் புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. வரும் (14ம்தேதி)பெரம்பலூர் தாலுகாவில் அரணாரை(தெற்கு), வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறை (கிழக்கு), குன்னம்தாலுகாவில் அத்தியூர்(தெற்கு), ஆலத்தூர்தாலுகாவில் புதுஅம்மாப்பாளையம் ஆகிய4வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்