SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லோடு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

9/12/2018 4:23:39 AM

பாடாலூர், செப்.12: ஆலத்தூர் தாலுகா சிறுவயலூரை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி (55). இவர் நேற்று முன்தினம் இரவு டி.களத்தூர் பிரிவு சாலை பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் சிறுவயலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் கீழே விழுந்த ரங்கநாதன் என்பவரை சுப்பிரமணியன் தூக்கிவிட்டார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி தற்கொலை: அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்த சேகர் மகள் சினேகா (17). கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சினேகா சரியாக கல்லூரிக்கு செல்லவில்லையென அவரது பெற்றோர் திட்டினர். இதில் மனமுடைந்த சினேகா, கடந்த 4ம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார. இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்