SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில அளவில் டென்னிஸ் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்ற எம்ஆர் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

9/12/2018 4:23:30 AM

ஜெயங்கொண்டம், செப்12: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் டென்னிஸ் போட்டி இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். முதல்நாள் ஆட்டத்தில் சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரியையும், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழக அணியையும் வென்றது. தொடர்ந்து கோவை மாருதி கல்லூரியுடன் விளையாடி இரண்டாம் இடத்தை பெற்றனர். வெள்ளிப் பதக்கத்தை வென்ற தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பாரதிதாசன் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் மணிவண்ணன் ஆகியோருக்கு கல்லூரி தாளாளர் ரகுநாதன், இணைச்செயலாளர் கமல்பாபு , இயக்குனர் மராஜமாணிக்கம், முதல்வர் தங்கபிச்சையப்பா, முனைவர் அன்பழகன் மற்றும் பயிற்சியாளர் அமர்நாத் ஆகியோர் பாராட்டு ெதரிவித்தனர்.   

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்