SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா 110 வது பிறந்த நாள் இன்று சைக்கிள் போட்டி

9/12/2018 4:23:03 AM

பெரம்பலூர்,செப்.12: அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி பெரம்பலூரில் இன்று(12ம்தேதி) நடக்கிறது என. மாவட்ட- விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளையாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டப்பிரிவின் சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டிகள் பெரம்பலூர் கலெக்டர்அலுவலக ரவுண்டானாவிலிருந்து நடைபெறவுள்ளது. பாலக்கரை வழியாகச்சென்று, மீண்டும்ரவுண்டானா வந்தடைவதற்கான வழித்தடத்தில் இன்று (12ம்தேதி)அதிகாலை 6.30மணியளவில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் தங்களதுசொந்தசெலவில் மிதிவண்டி கொண்டுவருதல் வேண்டும்.

மாணவ, மாணவியர் தங்களது பள்ளித் தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்றுவருதல் வேண்டும். வீரர், வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.இதில் 13வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிமீ தூரமும், மாணவியருக்கு 10 கிமீ தூரமும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான வயதுவரம்பாக, 6,7,8வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கிமீ தூரமும், மாணவியருக்கு 15கிமீ தூரமும் நடத்தப்படவுள்ளது.வயதுவரம்பு, 9,10-ம்வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கிமீ தூரமும், மாணவியருக்கு 15கி.மீ தூரமும் நடத்தப்பட உள்ளது.  வயதுவரம்பு, 11,12-ம்வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவி லும் முதல் 3இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசுகளும், முதல் 10இடங்களைப் பெறு பவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப் படும். இதற்காக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை பள்ளிவயது சான்றிதழுடன் 12ம்தேதி காலை6.30 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்