SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

9/12/2018 4:22:11 AM

காரைக்கால், செப். 12:  காரைக்கால் பஜன்கோவா (பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்) அரசு வேளாண் கல்லூரியில் மாவட்ட தேர்தல்துறை அதிகாரியும், கலெக்டருமான கேசவன் அறிவுறுத்தலின்படி தேர்தல் கல்விக்குழு துவங்கப்பட்டு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கந்தசுவாமி தலைமை வகித்தார். திருநள்ளாறு தாசில்தார் மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரியுமான முத்து பங்கேற்று கல்லூரி தேர்தல் கல்விக்குழுவை துவக்கி வைத்தார்.

முகாமில் 2018-19ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு இளநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பை சேர்ந்த கப்பல் படையின் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலத்திட்ட மாணவர்கள் உட்பட இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும், அதற்கு எப்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.  வேளாண் கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான மோகன் பங்கேற்று மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்