SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு உணவு விற்பனையாளர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கருத்தரங்கம்

9/12/2018 4:22:02 AM

நாகை,  செப். 12: தமிழகத்தில் 2019 ஜனவரி 1ம் தேதி முல் பல்வேறு வகையான  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து  நாகையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில்  பிளாஸ்டிக் விழிப்புணர்வு   ஏற்படுத்தும் வகையில்  உணவு விற்பனையாளர்களுக்கான  கருத்தரங்கம் நடந்தது.  உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். நாகை  இந்திய தொழிற்குழும தலைவர் ரமாச்சந்திரன், ஹோட்டல், தேநீர் கடை உரிமையாளர்  சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு  அலுவலர் அன்பழகன் வரவேற்றார்.

கருத்தரங்கில் பிளாஸ்டிக்  ஒழிப்பில் உணவு விற்பனையாளர்களின் பொறுப்பும் கடமையும் என்ற தலைப்பில்  தேசிய  சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல்  பொறியாளர் இராமசுப்பு, தொழிலாளர் உதவி ஆணையர்  பாஸ்கர், புள்ளியியல்  அலுவலர் அந்துவன்சேரல் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் ஹோட்டல், டீக்கடை  உரிமையாளர்கள்,  உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மாதேவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்