SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குட்கா ஊழல்வாதிகளை காப்பாற்றும் அதிமுக அரசை கண்டித்து நாகையில் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்

9/12/2018 4:21:53 AM

நாகை, செப். 12: நாகையில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மதிவாணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் பேசினார்.கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு குட்கா ஊழலில் ஈடுபட்டு சிபிஐ விசாரணையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரை பதவியை விட்டு நீக்க வேண்டும். குட்கா ஊழல்வாதிகளை காப்பாற்றும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் 18ம் தேதி நாகை  தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

வரும் 15ம் தேதி விழுப்புரத்தில் தலைமை கழகத்தால் நடத்தப்படவுள்ள முப்பெரும் விழாவிற்கு நாகை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிகளவில் பங்கேற்பது. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த 20 நாட்களுக்கு மேல் வழங்காததால் முளைத்த  நெல் பயிர்கள் காய்ந்து கருகியும், விதைத்த விதைகள் முளைக்காமல் சேதம் அடைந்து வருவதால் போதியளவு தண்ணீரை முறை வைக்காமல் திறக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வரி குறைப்பு செய்வதோடு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய செயலாளர்கள்  தாமஸ்ஆல்வா எடிசன், குமரவேல், சரவணன், செங்குட்டுவன், பழனியப்பன்,  மகாகுமார், வேதாரண்யம் நகர செயலாளர் புகழேந்தி,  பேரூர் செயலாளர்கள்  அட்சயலிங்கம், மரியசார்லஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், சார்லஸ்,  மணிவண்ணன்,   ஜோதிலட்சுமி சதாசிவம்,  சார்பு அணி அமைப்பாளர்கள் சேகர்,  அண்ணாதுரை, பழனியப்பன், அருள், செந்தில், மாரிமுத்து, சிங்காரவேல்,  பாரிபாலன், தர், முருகையன் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

 • venkhaiahnaidu

  செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்